இந்த வந்துட்டோம்ல… வித்யாசமான உடையில் கலக்கும் காஜல் அகர்வால்!

நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்!
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.
இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் அவரது மார்க்கெட்டை உயர்த்தியது. இதனிடையே கெளதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார்.
அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிரசவத்திற்கு பின்னர் மீண்டும் சிக்கென தோற்றத்திற்கு மாறி இருக்கும் காஜல் அகர்வால் தற்போது வித்யாசமான மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.







Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் tamilcinemax இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.